×

சந்தானத்துடன் காமெடி செய்தது சவாலானது: பிரியாலயா

சென்னை: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சுஷ்மிதா அன்புச்செழியன் படத்தை தயாரித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் ஆனந்த் நாராயணன் கூறும்போது, ‘90ஸ் கிட்ஸான சந்தானத்துக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் சிக்கல்.

அதற்கான முயற்சிகளில் அவர் இறங்கும்போது என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்பதை செம காமெடியுடன் ஜாலியாக சொல்லும் படம் இது. அதே சமயத்தில் இதில் எமோஷனும் சரிசமமாக இருக்கும். மே 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது’ என்றார். பட ஹீரோயின் பிரியாலயா கூறுகையில், ‘நான் சேலம் பொண்ணு. குட்நைட் படத்தில் சிறு வேடத்தில் நடித்தேன். கிளாசிக்கல் டான்ஸர் என்பதால் நடனப் பள்ளியும் நடத்துகிறேன். இதில் சந்தானம் சாருடன் நானும் காமெடி செய்து நடித்துள்ளேன். அது சவாலாக இருந்தது’ என்றார்.

The post சந்தானத்துடன் காமெடி செய்தது சவாலானது: பிரியாலயா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Anand Narayanan ,Priyalaya ,Thambi Ramaiah ,Vivek Prasanna ,Bala Saravanan ,Munishkanth ,Maran ,Sesu ,Swaminathan ,Kool Suresh ,Manophala ,Iman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காசு வாங்க போனேன் படம் வாங்கி வந்தேன்: சந்தானம் ‘கலகல’